ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி: கிறிஸ்துமஸ்  மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுமட்டுமின்றி புத்தாண்டை கொண்டாட தற்போது சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதாலும்,  தொடர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நேற்று நகரில் வாகன  நெரிசலும் காணப்பட்டது.

Related Stories:

>