×

ஆஸி. எதிரான பாக்ஸிங் டே 2-வது டெஸ்ட் போட்டி: சதம் விளாசினார் இந்திய கேப்டன் ரஹானே !

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சதம் அடித்தார். ரஹானே,  195 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார். தற்போது, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு  277 ரன்கள் எடுத்துள்ளது. கிரிக்கெட் டெஸ்ட் போட்டியகளில் ரஹானா அடிக்கும் 12-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அரணாக நின்று 198 பந்துகளை சந்தித்து 104 ரன்களை எடுத்துள்ளார். ரஹானா 104 ரன்னுடனும், ஜடேஜா 38 ரன்களுடன்  களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்களில் சதம் அடிக்கும் 4-வது இந்திய கேப்படன் ரஹானே ஆவார். நேற்று இந்திய , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 4, அஷ்வின் 3, முகமது சிராஜ் 2, ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா அணி 91.3 ஓவர்களில் 277 ரன்களும் 5 விக்கெட்டையும் இழந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி 195 ரன்கள் எடுத்துள்ளது.


Tags : Aussie ,Rahane ,Test ,India , Aussie. , 2nd, Test Match, Century, Rahane!
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...