×

சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கால்வாய் வெட்டிய விவசாயிகள்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணைக்கு அருகே சாத்தனூர், கொழுந்தம்பட்டு, வீராணம், தரடாப்பட்டு, கீழ்வணக்கம்பாடி, மேல்கரிப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ஏரிகள் அமைந்துள்ளது. இந்த ஏரிகளை நம்பி பாசனம் செய்து வரும் விவசாயிகள், சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மண்வெட்டி, கடப்பாரையுடன் சாத்தனூர் அணை நீர்த்தேக்கம் அருகே உள்ள மல்லிகாபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர், நீர்த்தேக்கத்தில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்வகையில், கால்வாய் வெட்ட ஆரம்பித்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கால்வாய் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.


Tags : lakes ,dam ,Thandarambattu ,Sathanur , Farmers cut the canal as water was not available to the lakes from the Sathanur dam: a commotion near Thandarambattu
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!