எந்த கூட்டணி நிரந்தரம் என்று யாராலும் சொல்ல முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

திருச்சி: திருச்சியில் பாரதிய ஜனதா மகளிரணி அகில இந்திய தலைவர் வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே தான் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமை அறிவிக்கும் என கூற வேண்டியுள்ளது. முதலில் கூட்டம் நடத்த வேண்டும். வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று பேரவையில் இடம் பெற தமிழக பாஜக விரும்புகிறது.

அதற்கேற்ப கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தொகுதி ஒதுக்கீட்டில் இடங்களும், பின்னர் அமைச்சர் பதவி குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எந்த கூட்டணியும் நிரந்தரம் என்று யாராலும் சொல்ல முடியாது என்றார்.

Related Stories:

>