×

முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திமுக கிராமசபைக் கூட்டங்களை நடத்தி அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்கிற மக்கள்  இயக்கத்தை நடத்தி  வருகிறது. இந்த இயக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்தக் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஒட்டு மொத்த மக்களும் திரண்டு வந்து அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற ஒருவரித் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவித்து, நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த கிராம சபைக்கூட்டங்கள் அரசியல் கட்சி முடிவின்படி நடைபெறுகிற ஜனநாயக வழிமுறையிலான இயக்கம் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத ஆத்திரத்துக்கு தமிழ்நாடு அரசு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக அரசின் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அவசர அவரசமாக, ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அது பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கு விரோதம் அல்லவா? திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்துப் பிரிவு மக்களும் பேராதரவு தருவதை கருத்தில் கொண்டு, ஊரக வளர்ச்சித்துறையின் சட்டவிரோத தவறான உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்.


Tags : Mutharasan , Mutharasan insistence
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு