×

மாநகராட்சி ஐகோர்ட்டில் உறுதி சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை

சென்னை:  சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல அதிகாரி ராம் பிரதீபன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

விதிமீறல் கட்டிடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, 5வது மண்டலத்தைப் போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பிப்.5க்கு ஒத்திவைத்தனர்.

Tags : buildings ,Corporation iCourt , Action against illegal buildings confirmed in Corporation iCourt
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...