மக்களை சந்திக்க முதல்வர் 3 நாள் பயணம்

சென்னை: வரும் 29ம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 31ம் தேதி வரை பொது மக்களின் குறைகளை கேட்டறியவும், பல்வேறு தொழிலாளர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நாளான 29ம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாமக்கல் நகரம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரப்பாளையம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளிலும், இரண்டாம் நாள் பயணமாக 30ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை  நாமக்கல் சேந்தமங்கலம் மற்றும் திருச்சி நகரம், துறையூர், முசிறி, மணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளிலும் மக்களை முதல்வர் சந்திக்கிறார்.

 மேலும், கடைசி நாள் பயணமாக 31ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருச்சி நகரம், ஸ்ரீரங்கம், திருவெரும்பூர், மணப்பாறை, ஆகிய பகுதிகளில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கூட்டமும், பொது மக்களை வீடு வீடாக சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Related Stories:

>