லடாக் போல அருணாச்சலில் சீனா ஊடுருவ முயன்றால் கடும் விளைவை சந்திக்கும்: ராணுவம் எச்சரிக்கை

புதுடெல்லி: லடாக்கை போலவே அருணாச்சல பிரதேச எல்லையில்  சீனா ஊடுருவ முயன்றால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இதன் காரணமாக இந்தியா, சீனா எல்லையில் கடந்த 6 மாதமாக கடும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்திலும் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இமயமலையின் 15,500 அடி உயரத்தில் உள்ள அருணாச்சல பிரதேச எல்லையில், ராணுவ வீர ர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது இந்திய எல்லையின் கடைசி முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதால், படையினர் எல்லைக்கு விரைவது எளிதாகி உள்ளதாக இந்தோ திபெத் படையின் 55 வது படை பிரிவின் கமாண்டர் ஐ.பி.ஜா தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘லடாக் எல்லையில் சீனா படைக்கு இந்திய ராணுவம் தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது. இதே போன்ற ஒரு நிலை அருணாச்சல பிரதேச எல்லையில் வந்தால், சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்துள்ளார்.

Related Stories:

>