மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாமில் பிரசாரத்தை தொடங்கினார் அமித்ஷா

கவுகாத்தி:  தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பாஜ தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜ பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று அசாம் மாநிலத்தில்  பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.  

கவுகாத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘முன்பெல்லாம் அசாம் மாநிலமானது போராட்டங்களாலும், வன்முறையாலும் அறியப்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது. ஆனால் முதல்வர் சோனோவால் சர்மா தலைமையிலான பாஜவின் ஆட்சியானது மாநில மக்களை ஒன்றிணைத்துள்ளது. அமைதி பயணத்தை மேற்கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுடன் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மேம்படுத்துதல் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரங்களாக மாறியுள்ளன’’ என்றார்.

Related Stories:

>