×

தொடர் மழையால் சென்னையில் குண்டும் குழியுமான சாலைகள்: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. எனவே இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக சென்னையில் ஒரு வாரம் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது.  

குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலை, மின்ட் சாலை, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை சீத்தாம்பாள் காலனி சாலை, தியாகராய சாலை, சேமியர்ஸ் சாலை, சித்தரஞ்சன் சாலை, மடுவாங்கரை முதல் ஆதம்பாக்கம் சாலை, மடிப்பாக்கம் சாலை, திருவெற்றியூர் நெடுஞ்சாலை, பள்ளிக்கரணை நாராயணபுரம் சாலைகள், வேளச்சேரி பிரதான சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ஆலந்தூர் ஆசர் கானா தெரு, ஸ்டேஷன் சாலை எம் கே சாலை கண்ணன் காலனி, தில்லை கங்கா நகர், கிழக்கு கரிகாலன் தெரு, ஏரிக்கரை தெரு, மேடவாக்கம் பிரதான சாலை,  மூரசம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணிய நகர், ராகவா நகர், சபாபதி நகர் மூவரசன்பட்டு பிரதான சாலை, கிண்டி மடுவின்கரை மசூதி காலனி 1 முதல் 10 தெருக்களில் மிகவும் மோசமாக உள்ளது.

179வது வார்டுக்குட்பட்ட தண்டீஸ்வரம் நகரில் இளங்கோ தெரு, பாரதி தெரு, டான்சி நகர், பேபிநகர் பகுதியில் உள்ள தெருக்கள், 180வது வார்டுக்குட்பட்ட தரமணி மகாத்மா காந்தி நகர், ராஜாஜி தெரு, தந்தை பெரியார் நகரில் கருணாநிதி   1வது, 2வது, தெருக்கள் பாரதியார் தெரு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, கென்னடி தெரு, அண்ணா திடல் சாலை, பாரதி நகரிலுள்ள  யமுனா தெரு, தபதி தெரு உள்பட பல சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் புழல் யூனியன் சாலை சமீபத்தில் பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறி சாக்கடையாக காட்சியளிக்கிறது.

இந்த பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கிற நிலை உள்ளது. மாதவரம் மண்டலம் பகுதிக்குட்பட்ட புழல் திருமலை நகர், காவாங்கரை, சக்திவேல் நகர், ஒற்றை வாடை தெரு, கதிர்வேடு, மகாலட்சுமி நகர், சூரப்பட்டு, புத்தகரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சமீபத்தில் பெய்த மழையால் மழை நீர் தேங்கி தெருக்களில் நடமாட முடியாமல் லாயக்கற்ற சாலையாக உள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான தென்றல் நகர் மேற்கு, 6வது தெரு, 7வது தெரு, 8வது தெரு, தென்றல் நகர் மேற்கு 2வது மெயின் ரோடு, தென்றல் நகர் கிழக்கு 13வது தெரு முதல் 17வது தெருக்கள், சரஸ்வதி நகர் டேங்க் ரோடு, எம்.ஜி.ஆர் தெரு காந்தி தெரு, சரஸ்வதி நகர் 3வது தெரு, 4வது தெரு, 6வது தெரு மற்றும் குறுக்கு தெருக்கள், விக்னேஷ்வரா நகர் முதல் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர் விரிவாக்கம் முதல் தெரு, முல்லை நகர் 2வது தெரு, 3வது தெரு, தேவி ஈஸ்வரி நகர் 1 முதல் 6வது தெருக்கள், வடக்கு முல்லை நகர், கக்கன் தெரு காமராஜர் தெரு, வடக்கு தென்றல் நகர் 12வது தெரு 13வது தெருக்கள், அண்ணனூர் ஜோதி நகர், மூன்று நகர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளான கோபாலபுரம் மெயின் ரோடு, குறுக்கு தெருக்கள், மாங்குளம் பிள்ளையார் கோயில் தெரு, சித்தேரிக்கரை ரோடு, தென்றல் நகர் 2வது குறுக்கு தெரு, 4வது மெயின் ரோடு, 10வது தெரு, 11வது தெரு, கிழக்கு கோபாலபுரம் 6வது தெரு, 9வது தெரு, 11வது தெரு, கோபாலபுரம் 4வது தெருவில் குறுக்கு தெருக்கள், சேக்காடு ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக கிடக்கின்றன.

இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியாமல் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. என்றும், இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு கொடுத்தும், பதிவுத்தபால் அனுப்பியும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தவித பயனும் இல்லை. இதைப்போன்று நல்லம்பாக்கம் கூட்ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் சாலை ஒட்டிய கிழ்ஒட்டிவாக்கம், ராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதிலிருந்து எழும் புழுதி இப்பகுதியில் மேகமூட்டம் போல் காணப்படுகிறது இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்ணில் மண் தூவி விட்டதுபோல் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகின்றன. இவ்வாறு சென்னையில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில்  387 கி.மீ பேருந்து வழித்தட சாலைகள் உள்ளன.
* மேலும் 5600 கிலோ மீட்டர் உட்புற சாலைகள், 1292 கிலோ மீட்டர் உட்புற சிமெண்ட் சாலைகள் உள்ளன.
* இதில் 4,000க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.

Tags : roads ,Chennai , Bumpy roads in Chennai due to continuous rains: Public demand to repair them quickly
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...