வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார்; புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார்; புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக தேர்தல் பிரச்சாரம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. அதற்கான பொதுக்கூட்ட அரங்கு அமைக்கும் பணியை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும். முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கப்படும். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார். என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், எம்ஜிஆர் என்ன நல்லாட்சி தந்தார் என்ற சீமானின் கேள்வி குறித்து கேட்கப்பட்டபோது, வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார்; புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் என்றார்.

Related Stories: