×

2028ம் ஆண்டில் அமெரிக்காவை முந்திச் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உருவெடுக்கும் : ஆய்வறிக்கையில் தகவல்

பெய்ஜிங் : அமெரிக்காவை மிஞ்சி 2028ம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  CEPR எனப்படும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தனது வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றை கடுமையான ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் திறம்பட கையாண்டதால் சீனாவின் பொருளாதார செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றையும் அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் முன்பு கணிக்கப்பட்டதை விட 5 ஆண்டுகள் முன்னதாகவே அமெரிக்க பொருளாதாரத்தை சீனா விஞ்ச உள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 5.7% ஆக இருக்கும் என்றும் 2026 முதல் 4.5% ஆக அது குறையும்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் 1.9%ஆக 2022 முதல் 2024ம் ஆண்டு வரை இருக்கும். ஜப்பான் 3வது இடத்திலேயே தொடரும் என்றும் இந்தியா ஜப்பானை முந்தும் நிலை ஏற்பட்டும் போது, அந்நாடு 4 அல்லது 5வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தினாலும் பொருளாதார வளர்ச்சி சரிய வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Tags : China ,world ,US , America, China, the world, the economy
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...