ஷாருக்கான்போல் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் வார்னர்!

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர்.  மேலும் இவர் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிட்னி தண்டர் அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி  வருகிறார். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். டேவிட் வார்னர் அவ்வப்போது இந்திய சினிமாப் பாடல்களுக்கு நடனம் ஆடி அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் பாடலான   ஷீலா கி ஜவானி  பாடலுக்கு தனது மகளுடன் சேர்ந்து நடனமாடி அந்த வீடியோவை சில மாதங்களுக்கு முன்னர் பதிவிட, பல லட்சக்கணக்கிலான பார்வையாளர்களை அந்த வீடியோ பெற்றது.

இவரது புட்டா பூமா தெலுங்கு பாடல் நடனம், இஞ்சி இடுப்பழகி பாடல் நடனம், ஒட்டகத்த கட்டிக்கோ பாடல் நடனம், பாகுபலி கெட்டப்பில் வசனம், முக்காலா முக்காபுலா நடனம் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில்  வரவேற்பினைப் பெற்ற வீடியோக்களாகும். அந்த வகையில் இப்போது டேவிட் வார்னர். பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் ஒரு படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் சண்டை போடுவதைப் போல் இந்த வீடியோவில் வார்னர் அசத்தியுள்ளார். இந்த  வீடியோவை 1 மில்லியன் மக்கள் லைக் செய்துள்ளனர். வார்னரின் இன்ஸ்டா வீடியோக்களுக்கு என்றே தனிப்பட்ட அளவில் ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>