×

சான்டா கிளாசாக மாறிய சச்சின்

மும்பை: கிறிஸ்துமசையொட்டி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சான்டா கிளாசாகவே மாறி தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல  முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் இந்த நாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ``வரும் ஆண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி, திருப்தி உள்ளிட்டவை கிடைக்க வேண்டும்’’ என்று வாழ்த்தி யுள்ளார்., ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, தன்னுடைய கிறிஸ்துமஸ்  வாழ்த்தை பகிர்ந்ததுடன், தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை மிஸ் செய்வதாக பிட்டுள்ளார்.

Tags : Sachin ,Santa Claus , Sachin turned into Santa Claus
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!