×

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும்  சிகிச்சை பெறலாம்.

 அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பை அடைதல்:

சுகாதாரத்தை ஊக்குவித்தல், நோய்த்தடுப்பு, சிகிச்சை, குணமடைதல், பராமரிப்பு உட்பட அனைத்து சுகாதாரச் சேவைகளையும் உள்ளடக்கியதே இதுவாகும். இந்தச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, நிதிச் சுமையில் இருந்து மக்களைக் காத்து ஏழ்மையில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகிய இரண்டு தூண்களைக் கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Kashmir ,Jammu ,Modi , Prime Minister Modi
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...