×

மாடர்னா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கா மருத்துவருக்கு கடுமையான பக்கவிளைவு : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வாஷிங்டன் :ஃபைஸரைத் தொடர்ந்து மாடர்னா கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவில் பக்கவிளைவு ஏற்படுத்தி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனை கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து  ஃபைசர் தடுப்பு மருந்தைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் மாடர்னா தடுப்பூசி பொதுமக்களுக்கு அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம்  ஃபைசர் மருந்தால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் மாடர்னா தடுப்பூசியாலும் பக்கவிளைவுகள் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்காவில் முதல்முறையாக தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டனைச் சேர்ந்த புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் மாடர்னா தடுப்பூசியால் பக்கவிளைவுக்கு ஆளானவர். மாடர்னா மருந்தை எடுத்துக் கொண்டதுமே இவருக்கு உடலில் கடுமையான விளைவுகள் ஏற்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறுகிறது. மயக்கம், இதயபடபடப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா புதிய வைரஸை தங்களது தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் என மாடர்னா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Intensive Care In Hospital ,American Physician Who , Moderna, corona, vaccine
× RELATED ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ நடிகை...