'தி.மு.க நடத்தும் கிராமசபை கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது': திருமாவளவன்

சென்னை: திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் நடவடிக்கை கருத்து, பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் போக்கு என குறிப்பிட்டார். மேலும் தடை விதிக்கும் போக்கை கைவிட்டு, கருத்து, பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories:

>