வாசுதேவநல்லூர் அருகே வயல்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே வயல் பகுதிக்குள் யானைகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வாசுதேவநல்லூர் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (69). இவருக்கு சொந்தமாக வாசுதேவநல்லூர் பூலாங்குளம் குளத்து  பரவில் விவசாய நிலம் உள்ளது. இதில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டு  யானைகள் காளியப்பனின் வயல் பகுதிக்குள் புகுந்து சுமார் 3 ஏக்கர் பரப்பில் இருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தியது.

இது குறித்து காளியப்பன் வருவாய் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சிவனு  பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் காஜா முகைதீன், பாண்டி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் சேதப்படுத்திய நெற்பயிர்களை  பார்வையிட்டனர். காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் வயல் பகுதிக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>