காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயம், உத்திரமேரூர் மல்லிகாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே, புனித சூசையப்பர் ஆலயம், சிஎஸ்ஐ ஆலயம், நத்தம் கல்வாரி மலை, வல்லம் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன. இதில் கலந்து கொண்ட ஏராளமான மக்கள் புத்தாடை அணிந்து, ஏசுபிரான் குறித்து பாடல்கள் பாடி, கேக் வெட்டி கொண்டாடி, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.மறைமலைநகர் மாதா ஆலயம், பாலூர், ஆத்தூர், சிங்கபெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. மதுராந்தகம் அடுத்த தச்சூர் தேவாலயம், அச்சிறுப்பாக்கம் அருகே மழைமலை மாதா தேவாலயம்,  செங்கல்பட்டு சிஎஸ்ஐ தூய ஆந்திரேயர் திருத்தலம், அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலம், கோவளம் புனித கார்மேல் அன்னை ஆலயம்,  மாமல்லபுரம் திருக்குடும்ப தேவாலயம்.

கல்பாக்கம் புனித அந்தோணியார் திருத்தலம், கல்பாக்கம் காளான் தேவாலயம் உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலியும், நேற்று அதிகாலை ஜெப திருப்பலியும், கூட்டு ஆராதனையும் நடந்தன.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர். ஏழைகளுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கினர். இயேசுபிரான பிறப்பை சித்தரிக்கும் வகையில் வீடுகளில் குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Related Stories:

>