தமிழக மீனவர்களின் படகுகளை பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்: இலங்கை அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் படகுகளை பிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு இலங்கை மீனவர்களிடம் அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்களுடன் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கலந்துரையாடல் நடத்தினார்.

பருத்தித்துறை பிரதேச செயலக அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ‘‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் அவர்களது படகுகளை பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். இதனால், வருகின்ற பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.இந்த பேச்சு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டே இப்படி பேசுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>