×

இன்று முதல் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகள் ஆரம்பம் ஆஸி.-இந்தியா, நியூசி.-பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா-இலங்கை மோதல்

மெல்போர்ன்:   இன்று தொடங்கும்  ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா-இந்தியா, நியூசிலாந்து-பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா-இலங்கை அணிகள் மோதுகின்றன.கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ‘பாக்சிங் டே’ போட்டிகள் என்று அழைக்கப்படுவது வழக்கம். அப்படி இன்று தொடங்க உள்ள ‘பாக்சிங் டே’ போட்டிகளில்  ஆஸ்திரேலியா-இந்தியா, நியூசிலாந்து-பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா-இலங்ைக அணிகள் மோத உள்ளன.

ஆஸ்திரேலியா-இந்தியா
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள்  போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸியும், டி20தொடரை 2-1என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றின.இந்நிலையில் அடிலெய்டில் நடந்த முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியை ஆஸி 8 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. கூடவே 2வது இன்னிங்சில் 36ரன்னில் இந்தியாவை வாரிச்சுருட்டி வரலாற்று சாதனையையும் ஆஸி படைத்தது.அந்த பரிதாப தோல்விக்கு பிறகு ஆஸி-இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

கேப்டன் ரகானே
 இந்த டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரகானே தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. முதல் டெஸ்ட் தோல்வியால் ஏற்பட்ட சரிவிலிருந்து அணியை மீட்டெடுக்கும் பெரும் பொறுப்புடன் ரகானே  கேப்டனாகி உள்ளார். அதற்கு வசதியாக மாற்றங்களுடன் 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

கில், சிராஜ் அறிமுகம்
  பிரித்வி ஷா, விருத்திமான் சாஹா ஆகியோர் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில்  அறிமுகமாகின்றனர்.
பிரித்வி ஷா தூக்கப்பட்டதால்   மயாங்குடன், ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காராக களம் இறங்குவார். கூடவே  முகமது ஷமி காயம் காரணமாக விலகியதால்  முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார்.

மீண்டும் ஜடேஜா, ரிஷப்
நாடு திரும்பிவிட்ட  கோஹ்லிக்கு பதிலாக நடுவரிசையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா களம் காணுவார்.  விருத்திமான் நீக்கப்பட்டதால் விக்கெட் கீப்பர் பணியுடன், நடுவரிசை பேட்ஸ்மேன் பணியையும் ரிஷப் பார்த்துக் கொள்வார். கோஹ்லிக்கு பதில் பேட்ஸ்மேன் பொறுப்பை  ராகுல் ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரிஷப்  ஆகியோர் அதை ஈடு செய்வார்கள் என பிசிசிஐ எதிர்பார்க்கிறது.

மூவரணி களத்தில்...
 முதல் டெஸ்ட் போட்டியில்  இந்திய அணியின் பெருமையை தக்க வைத்த மூவரணியான  அஷ்வின், பும்ரா, உமேஷ் ஆகியோர் அணியில் தொடருகின்றனர். இந்தியா 4பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டபோதே  பந்துவீச்சில் வலுவாகவே இருந்தது. இப்போது 6பந்து வீச்சாளர்களுடன் களம் காணுகிறது. இந்த மாற்றங்கள் ஆஸிக்கு சவாலாக மாறலாம்.

மாற்றம் ஏதுமில்லை
அதே நேரத்தில் ஆஸி அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதிப்படுத்தி விட்டார். அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்ட டிம் பெயின் தலைமையிலான அதே அணி,  மிரட்டல் வீரர்கள் லாபுஷேன், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருடன் உற்சாகமாக இன்று விளையாட உள்ளது.

நியூசிலாந்து- பாகிஸ்தான்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இன்று முதல் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடுகிறது. பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் முதல் டெஸ்ட்  போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று காலை தொடங்குகிறது. அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாக் அணியும் களம் காணுகின்றன.

தென் ஆப்ரிக்கா-இலங்கை
கொரோனா பீதிக்கு பிறகு இலங்கை  முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அங்கு, 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பாக்சிங் டே போட்டியான முதல் டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. அதில்  டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்காவும்,  டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

Tags : Test matches ,Boxing Day ,India ,Aussie ,South Africa ,Sri Lanka ,Pakistan , India, New Zealand.-Pakistan, South Africa-Sri Lanka conflict
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...