சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு

திருவனந்தபுரம்:  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி  திறக்கப்பட்டது. 16ம் தேதி முதல் பூஜைகள் நடந்து வருகின்றன. மண்டல பூஜை நிறைவு  சிறப்பு வழிபாடு இன்று (26ம் தேதி) நடக்கிறது.  

மண்டல பூஜையை முன்னிட்டு  ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் எடையிலான தங்க அங்கி ஆரன்முளா  பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 22ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த  தங்க அங்கி நேற்று சன்னிதானம் கொண்டு  வரப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி  சார்த்தி தீபாராதனை நடத்தப்பட்டது.    மண்டல பூஜை சிறப்பு  வழிபாடுகள் இன்று காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடக்கின்றன.  தொடர்ந்து  நடைபெறும் வழக்கமான  பூஜைகளுக்கு பின்னர் மண்டல பூஜை நிறைவு பெற்று, இரவு 9  மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.  மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி  நடக்கிறது. 

Related Stories:

>