×

அமமுக தென்சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அமமுக தென்சென்னை கிழக்கு, தென்சென்னை தெற்கு, செங்கல்பட்டு வடக்கு என கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை கிழக்கு  மாவட்டம் - சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி. தென்சென்னை தெற்கு மாவட்டம் - சைதாப்பேட்டை சட்டமன்ற  தொகுதி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி.

இதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் - தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிகளாக செயல்படும். தென்சென்னை கிழக்கு  மாவட்ட  செயலாளராக நீலாங்கரை வி.சி.முனுசாமி, தெற்கு மாவட்ட செயலாளராக கட்சி துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், செங்கல்பட்டு  வடக்கு மாவட்ட  செயலாளராக பொறியாளர் அணி செயலாளர் ம.கரிகாலன் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.



Tags : Amamuga Tenchennai South ,East District Secretaries , Amamuga South Chennai South, East Appointment of District Secretaries
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...