பாமக வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றிய 5 பேருக்கு செயல்வீரர் விருது: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றிய 5 பேர் செயல்வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக  வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2020ம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும்  மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி 2020ம் ஆண்டுக்கான பாமக சிறந்த செயல் வீரர் விருதுகளை பெறுவதற்கான சிவப்பிரகாசம், செல்வக்குமார், சுப்பிரமணிய அய்யர், நிர்மலா ராசா, செந்தில் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதுகள் பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்க காசு கொண்டதாக இருக்கும். வரும் 31ம் தேதி காலை நடைபெறவுள்ள, ‘2020ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2021ம் ஆண்டை வரவேற்போம்’ என்ற  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>