×

தடை விதிக்கப்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: பதிவுத்துறை ஐஜி எச்சரிக்கை

சென்னை: தடை செய்யப்பட்ட சொத்துக்கள் மீது ஆவண பதிவு மேற்கொள்ளும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர்  அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றக்கை: பிஏசிஎல் (pearls agrotech corporation ltd) என்ற நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்பில் இருந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி  அந்நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர்களில் சட்ட விரோதமாக அசையா சொத்துக்களை கிரயம் பெற்றுள்ளதாகவும், இதனில் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் காவல்துறையில் புகார்அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில்  பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட சொத்து கைப்பற்றப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களில் கிரயம் பெறப்பட்ட 15829  எண்ணிக்கையிலான சொத்து விவரங்கள்,

அந்த அமைப்பால் அனுப்பி வைக்கப்பட்டு இச்சொத்துக்கள் பரிமாற்றம் ஏதும் மேற்கொண்டு ஆவணங்கள் ஏதும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆர்எம்.லோதா குழுவின் முன் அனுமதியன்றி  ஆவணங்கள் பதிவுக்கு ஏற்க கூடாது என்று தலைமை செயலாளர் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, நீதிபதி லோதா குழுவின் முன் அனுமதியின்றி ஆவணங்கள் பதிவுக்கு ஏற்க கூடாது என தெரிவித்திருந்தும், சட்ட விரோதமான நபர்களால்  குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதாக புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளதாகவும், எனவே, இதனில் பதிவுக்கு தடை செய்யப்பட்ட சொத்து விவரங்கள் மீது ஆவணங்கள் ஏதும் பதிவுெ  சய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதன் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சில புலங்களின் நடப்பு நேர்விலான பதிவுக்கு தடை செய்யப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்கள் மீது ஆவண பதிவுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற விவரம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. நீதிமன்ற ஆணைக்கிணங்க மத்திய புலனாய்வு அமைப்பால் பிஏசிஎல் நிறுவன சொத்துக்கள்  கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கும் நிலையில், அவற்றன ்மீது பதிவு நடவடிக்கை மேற்கொள்ளுதல் நீதிமன்றம் அவமதிப்புக்குரிய செயலாகும். இந்நிகழ்வில் ஏற்கனவே, இவ்வலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி  தவறாது செயல்படுமாறு அனைத்து பதிவு அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்நிகழ்வில் தடை செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எவ்விதமான ஆவணமும் பதிவு மேற்கொள்வதோ அல்லது பதிவு மேற்கொண்டதாக உரிய  ஆதாரங்களுடன் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு வரப்பெறின் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Strict action will be taken if securities are forfeited: Registrar IG Warning
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...