புதிய வேளாண் சட்டத்தின்கீழ் நடவடிக்கை ரூ.40 லட்சம் ஏமாற்றிய வியாபாரியின் வீடு ஏலம்

போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடம் ரூ.40 லட்சம் ஏமாற்றிய வியாபாரி மீது  புதிய வேளாண் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு ஏலம் விடப்பட்டது.கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள்  இயற்றப்பட்டன. பாஜ ஆளும் மாநிலங்கள் இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தி உள்ளன. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மோசடியில்  ஈடுபடும் வியாபாரிகள் மீது புதிய வேளாண் சட்டங்களின்படி விவசாயிகள் புகார் அளித்து நிவாரணம் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குவாலியர் மாவட்ட கலெக்டர் காஸ்லேந்திர விக்ரம் சிங் கூறுகையில், ‘குவாலியர் மாவட்டம், பிதாவர் வட்டம், பாஜ்னா கிராமத்தை சேர்ந்த வியாபாரி பல்ராம் சிங், அப்பகுதியை சேர்ந்த 42 விவசாயிகளிடம் இருந்து ரூ.40 லட்சம்  மதிப்பிலான வேளாண் விளைபொருட்களை வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை அவர் வழங்கவில்லை. தலைமறைவான அந்த வியாபாரி மீது 23 விவசாயிகள் புகார் அளித்தனர். அதனால் அந்த வியாபாரி மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டிருக்கிறது. புதிய வேளாண் சட்ட விதிகளின்படி வியாபாரியின் வீடு ஏலம் விடப்பட்டது. அதில் ரூ.1.45 லட்சம் கிடைத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பல்ராம் சிங்கின் நிலத்தையும் ஏலம்  விட நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்

Related Stories:

>