×

மாணவி அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் 2வது நாள்பிரசாரம் இன்று தொடங்கினார்

அரியலூர்:அரியலூர் குழுமூரில் நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து 2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை இன்று காலை தொடங்கினார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரையை அரியலூர் மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கினார். அப்போது அரியலூர் புறவழி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் சிலையை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.

பின்னர் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த ஆறுமுகம் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, கீழப்பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், கண்டிராதீர்த்தம் கிராமத்தில் உள்ள சோழமாதேவி ஏரியை பார்வையிட்டார். கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உதயநிதிஸ்டாலின் பேசுகையில், ஊழல்கள் புரிந்த முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்றார். பின்னர் மாலை ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடத்தில் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்தார். 2வது நாளான இன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள நீட்தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் செந்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் மதியம் பெரம்பலூர் புறப்பட்டு சென்றார்.

Tags : Stalin ,Udayanithi ,campaign ,Anita , Student, Anita, statue, Udayanithi Stalin, propaganda
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...