ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

சென்னை: ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்க்கை அளித்துள்ளது. ரத்த அழுத்தம் சீரானதும் ரிச்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தொற்று இல்லாத போதிலும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Related Stories:

>