அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்!: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை தொடரவே பிரதமர் மோடி விரும்புகிறார். புதிய வேளாண் சட்டங்கள் வரும் ஆண்டுகளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆதாயம் இல்லாவிடில், சட்டத் திருத்தம் செய்ய அரசு தயாராக உள்ளது எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>