×

சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் திருட்டு வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச்சட்டம் 380 (திருட்டு) பிரிவின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது. திருட்டு வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சிபிஐ வசமிருந்த சுரானா நிறுவனத்தின் தங்கம் கிலோ கணக்கில் மாயமான வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக 2012ல் சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ ரெய்டு நடத்தினர். சிபிஐ பறிமுதல் செய்த 400.47 கிலோ தங்கத்தில் 103.86 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே தங்கம் வைக்கப்பட்டிருந்தது. அந்த தங்கத்தை சுரானா நிறுவனம் பல வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றிருந்த நிலையில் அந்த வங்கிகள் மூலமாக நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சிபிஐயிடம் 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த வழக்கை பொறுத்த வரை சிபிஐ அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கிலோ தங்கம் காணாமல் போனது, சிபிஐ அதிகாரிகள் மீது வழக்கு பதிந்திருப்பதாக தகவல் இருக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சம்மன் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்க உள்ளனர்.

Tags : CBCID ,CBI ,Chennai , CBI, gold, theft
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...