×

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது : மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா

டெல்லி : விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது  என  மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முற்றிலும் உறுதி பூண்டுள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. தற்போதுள்ள தடைகளை அகற்றி விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது தான் மத்திய அரசின் நோக்கம்.  இந்த புதிய மசோதாக்கள், விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும்.  இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

பாரத ரத்னா மறைந்த திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினம், சிறந்த நிர்வாகத்திற்கான தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விவசாயிகளிடம் இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அதன்பின் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 கோடியை நேரடியாகச் செலுத்துகிறார்.

இவ்வாறு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறினார்.


Tags : Ratan Lal Kataria ,Parliament , Union Minister, Ratan Lal Kataria
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...