×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவில், சேலம் அழகிரிநாதர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. போடி ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், மதுரை தல்லாகுளம் வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. திண்டிவனம் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலிலுள்ள மத்திய திருப்பதி எனப்படும் பெருமாள் சன்னதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில், திருவாரூர் புலிவலம் வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மதுரை அழகர் கோவில், நாமக்கல் மலைக்கோட்டையில் அமைந்துள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் ஸ்ரீதலசயன பெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

காரைக்குடி அரியக்குடி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில்  சீனிவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்பு தரிசனம் செய்தனர்.

Tags : Opening ,heaven ,temples ,eve ,Perumal ,Tamil Nadu ,Vaikunda Ekadasi , Heaven gate, opening
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு