×

பூண்டி, வாயலூரில் திமுக கிராம சபை கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கூனிப்பாளையம் கிராமத்தில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய பொறுப்பாளர் ரவி தலைமை தாங்கினார்.ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, துணைச்செயலாளர்கள் நாகராஜ், ஸ்ரீதேவி, வேணுகோபால், ஊராட்சி தலைவர்கள் ரகு, சசிகலா பாலசுப்பிரமணி, ராகவன், கணேசன், சினிவாசன், துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பெண்கள் கூறியதாவது, ‘கூனிப்பாளையம் அருந்ததியர் காலனி மற்றும் ராமஞ்சி கண்டிகை ஆகிய கிராமங்களில் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். நூறு நாள் வேலைக்கு கூலி உயர்த்தி தர வேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை வீடுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வைத்தனர். பொன்னேரி: தமிழகம் முழுவதும் அதிமுக அரசின் அவலங்களை குறித்தும் பொதுமக்களின் குறைகள் குறித்து கேட்டறிவதற்கும் திமுக சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில், வாயலூர் ஊராட்சியில், செங்கழுநீர் மேடு கிராமத்தில் நேற்று மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை. மேலும் திமுக ஆட்சியில் தங்களது கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து டி.44 தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் பொதுமக்களுக்கு பதிலளித்து பேசுகையில் 5.மாதங்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து அடிப்படை தேவைகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார். தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ஏன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் அதிமுக அரசால் பொதுமக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்ற அடிப்படை வசதிகள் பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பிரதிநிதிகள் வெங்கடாசலபதி, மீ.வி.கோதண்டம், சுரேஷ், லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,meeting ,Grama Niladhari ,Poondi ,Vayalur , DMK Grama Niladhari meeting at Poondi, Vayalur
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி