×

பிடிஓக்கள் இட மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் அளிக்கப்படுகிறது. அதன்படி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்கிருஷ்ணன் (வட்டார ஊராட்சி), அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சிக்கு மாற்றப்படுகிறார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி (கிராம ஊராட்சி), வட்டார ஊராட்சிக்கும், உமா (கிராம ஊராட்சி) திருக்கக்ழுகுன்றம் ஒன்றியத்தில் இருந்து, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கும், பிரகாஷ்பாபு அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் இருந்து மதுராந்தகம் ஒன்றியத்துக்கும், தண்டபாணி மதுராந்தகம் ஒன்றியத்தில் இருந்து (வட்டார வளர்ச்சி அலுவலர்) திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்கு மாற்றப்படுகின்றனர்.

Tags : Relocation of BDOs
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...