பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு: நீதிபதி உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டியைச் சேர்ந்த பூசாரி பின்னியக்காள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: லிங்கநாயக்கன்பட்டி, துர்க்கையம்மன் கோயிலில் எங்கள் குடும்பத்தினரே 10 தலைமுறையாக பூசாரியாக உள்ளோம். என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது ஒரே வாரிசான நான் பூசாரி பணி செய்தேன். பெண் என்பதால் கிராமத்தினர் சிலர், நான் பூசாரியாக பணியாற்றக் கூடாது என தடுத்தனர். வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதிமன்றம் என்னை அனுமதித்தது. ஆனால், வருவாய்துறையினரும், போலீசாரும் என்னை பூசாரி பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். பெண் என்ற காரணத்தினால் தடுக்கப்படும் எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி பூசாரியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>