×

மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு இரவு ஊரடங்கு உத்தரவு கர்நாடகாவில் திடீர் ரத்து: ஒரே நாளில் முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் இரவு ஊரடங்கை முதல்வர் எடியூரப்பா திரும்ப பெற்றுள்ளார். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என இம்மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜ எம்எல்ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரவு நேர ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதற்காகவே இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நேரம் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்தை நிறுத்த முடியாது என்பதால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இரவு ஊரங்கு ரத்து  செய்யப்படுகிறது. இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதற்காக தேவையின்றி யாரும் வெளியில் சுற்றக்கூடாது. காரணம் இன்றி வெளியில் உலா வருகிற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Karnataka , Statewide protest against night curfew abruptly canceled in Karnataka
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!