இந்தியாவுடன் பேசுவது இப்போது சாத்தியமில்லை: பாக். சொல்கிறது

இஸ்லாமாபாத்: ‘இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் எதுவும் இப்போது இல்லை,’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரோஷி கூறியுள்ளார். இந்தியாவில் சமீபகாலங்களில் நடத்தப்பட்ட பதன்கோட் விமான நிலைய தாக்குதல், யூரியிலுள்ள ராணுவ முகாம் தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகியவற்றை நிகழ்த்திய தீவிரவாத குழுக்களின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று ஏற்கனவே இந்தியா கூறியிருந்தது. இதே கருத்தை தற்போது பாகிஸ்தானும் அறிவித்துள்ளது. முல்தான் நகரத்தில் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு குரேஷி அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவுடன் வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. இப்போது அதற்கான சூழலும் இல்லை,’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>