×

குமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை: கேரளாவில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை மட்டுமே கேரள போலீசார் அனுமதிக்கின்றனர். அதன்படி மீன்,  இறைச்சி, காய்கறி, பூக்கள், பால், மளிகை பொருட்கள், பத்திரிகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  இதனால் மற்ற வாகனங்களின் போக்குவரத்து கேரள எல்லை பகுதியில் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் குமரி- கேரள  எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் மட்டும் குறையவில்லை. இந்நிலையில் ேநற்று முன்தினம் விளவங்கோடு வட்டல் வழங்கல் துறை தாசில்தார் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள்  படந்தாலுமூடு பகுதியில வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட மினி டெம்போ ஒன்று வந்தது. அதிகாரிகள் நிறுத்த சைகை காண்பித்தும் நிறுத்தாமல் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்தினர். கோழிவிளை செக்ேபாஸ்ட்டை கடந்து  சாலையோரம் டெம்போவை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பி விட்டனர். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து  அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து காப்புகாடு குடோனிலும், டெம்போவை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்….

The post குமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kumari border ,Kerala ,Kaliakavilai ,Kumari district ,Kumari ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்:...