×

ஏரிகளில் கழிவு நீர் கலப்பு: தொழிற்சாலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு: குடிநீருக்கு பயன்படுத்தும் ஏரிகளில் மாசு கலந்த நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகளை கண்காணிக்கும்படி  மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டல துணை ஆணையர்களுக்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் ஏரிகளில் கலப்பதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தது. மாசு நீர் கலந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். எனவே ஒவ்வொரு துணை ஆணையரும் தன்னுடைய நேரடி பார்வையில் ஏரியின் பாதுகாப்பை கொண்டு வரவேண்டும். மாசு நீரை ஏரியில் விடும் தொழிற்சாலைகளை கண்காணித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன் அறிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

Tags : lakes ,factories , Wastewater mixing in lakes: Order for authorities to monitor factories
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!