ஆனேக்கல் வளர்ச்சி பெயரில் ரூ.838 கோடி முறைகேடு: முதல்வரிடம் என்.ஆர்.ரமேஷ் புகார்

பெங்களூரு: ஆனேக்கல் வளர்ச்சி பெயரில் ரூ. 838 கோடி முறைகேடு நடந்துள்ளது என என்.ஆர்.ரமேஷ் முதல்வர் எடியூரப்பாவிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக  பாஜ செய்தி தொடர்பாளரும் பெங்களூரு தெற்கு பாஜ தலைவர் என்ஆர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆனேக்கல் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்ட பணிகளில்  ரூ.576.60 கோடி முறைகேடு நடந்துள்ளது.இதுதவிர 69 ஏரிகளில் புனரமைப்பு நடந்துள்ளது என  ரூ.260.61 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகளில்  4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட கீழ்மட்ட அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. முறைகேடு நடந்தது எப்படி?அதற்கு யார் யார் துணை போனார்கள்? என்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆவணங்கள் கிடைத்துள்ளன. ரூ.838 கோடி  முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா, ஏபிசியிலும் புகார் அளித்துள்ளோம். அத்துடன் ஊழல் குறித்து விரைவாக  விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக முதல்வர் எடியூரப்பாவிடம் அதற்கான ஆவணத்துடன் புகார் அளித்துள்ளோம்.

ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது என பல கோடி அளவில்  முறைகேடு நடந்துள்ளது. ஏரிகள் தூர்வாரப்பட்டால் அதில் இருந்து எடுக்கப்பட்ட மணல்கள்  எங்கே சென்று கொட்டப்பட்டன? அதற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. இந்த பணிகளை டெண்டர் எடுத்த நிறுவனம் மீது  சிஐடி தணிக்கை நடத்த வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளோம் என்றார்.

Related Stories:

>