பரப்பன அக்ரஹாராவில் சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகை ராகிணி உடல் நலக்குறைவால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கன்னட திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக ஆர்.டி.ஓ அதிகாரி ரவி சங்கர் முதலில் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலை வைத்து கன்னட நடிகை ராகிணி திவேதி கைதானார். பின்னர் இது தொடர்பாக நடிகை சஞ்சனா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நடிகை சஞ்சனா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விடுதலையாகிவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராகிணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சிறை காவலரை அவர் தொடர்பு கொண்டு, மருத்துவ உதவி கோரியுள்ளார். அதை ஏற்ற சிறை நிர்வாக அதிகாரிகள் மருத்துவரை அழைத்து சென்று, உடல் நிலையை பரிசோதனை செய்தனர். அப்போது ராகிணி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டுமென்று கூறினார்.

ஆனால் ஏற்கனவே அவர் ஜாமீன் மனு மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப முடியாது என்று கூறி சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிகாரிகள் அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.

இந்நிலையில் ராகிணியின் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. அதில் இந்த உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் பெற முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் ஜாமீன் மனு மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள  நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப முடியாது என்று கூறி சிறை  அதிகாரிகள் மறுத்துவிட்டனர்

Related Stories:

>