×

தேன் உற்பத்தி மூலம் 50 குடும்பங்களை வாழ வைக்கும் இளைஞர்

கோலார்: வாழ்க்கையில் முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு தேன் உற்பத்தியில் சாதனைப்படைத்து வரும் இளைஞர் உதாரணமாக விளங்குகிறார்.மாவட்டத்தின் கோலார் தாலுகா, தொண்டல கிராமத்தை சேர்ந்தவர் வினய், ஐடிஐ தொழில்பயிற்சி முடித்த இவர், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை. இயற்கை தேன் உற்பத்தி செய்தால் நல்ல லாபம் பெற முடியும் என்று சிலர் கூறியதை நம்பி, தேன் உற்பத்தி செய்யும் பயிற்சி பெற்றார்.

அதன் பின் வீட்டில் இரு பெட்டிகளில் தேன் உற்பத்தி செய்யும் தொழிலை நம்பிக்கையுடன் தொடங்கினார். அவர் முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. முதல் முயற்சியோ நல்ல லாபத்தை கொடுத்ததுடன் இத்தொழிலை தொடருவதற்கான உத்வேகத்தை கொடுத்தது. இரு பெட்டியில் தயாரிக்கும் தேன் உற்பத்தியை 4 பெட்டியாக உயர்த்தினார். அதில் உற்பத்தி செய்யும் தேனை விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் வழியை கண்டுப்பிடித்தார்.

தரமான தேன் உற்பத்தி செய்வதால், பெரிய கம்பெனிகள் நம்பிக்கையுடன் வினய் தயாரிக்கும் தேனை விற்பனை செய்ய முன்வந்தனர்.இதன் மூலம் தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார். தற்போது 25 ெபட்டிகளில் தேன் உற்பத்தி செய்து வருகிறார். அவர் தொடங்கியுள்ள தொழிலில் சுமார் 50 குடும்பங்கள் தற்போது வேலை செய்து வருகிறார்கள். வேலை செய்பவர்களிடம் பராமரிப்பு பணியை ஒப்படைத்து விட்டு, தேன் மார்க்கெட்டிங்கை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

ஓராண்டில் ரூ.6 முதல் 7 லட்சம் வரை லாபம் ஈட்டி வருவதாக வினய் தெரிவித்தார். வேளாண் தொழிலில் தேன் உற்பத்தியும் ஒரு அங்கமாக உள்ளது. ஆனால் தேன் உற்பத்தி செய்வது மற்றும் விற்பனை செய்வது சுலபமானது அல்லது. அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் தேனில் கலப்படம் செய்யாமல் இயற்கையாக மக்களுக்கு கொடுத்து நம்பிக்கை பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags : families , Young man who makes 50 families live by honey production
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...