நடிகை சித்ரா தற்கொலை வழக்கு ஆர்டிஓ விசாரணை நிறைவு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சித்ராவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்தான்  திருமணம் நடந்துள்ளது. அவர், பதிவு திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக பெரும்புதூர் ஆர்டிஓ திவ்ய, விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து, சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா, தற்கொலை செய்து கொண்ட விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. பின்னர், சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம், நேற்று சுமார் 2 மணிநேரம் ஆர்டிஓ திவ்ய  விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், சித்ரா தற்கொலை குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றது. ஓரிரு நாளில் இதன் அறிக்கை, போலீசாரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் போலீசாரின் நடவடிக்கை இருக்கும் என்றார்.

Related Stories:

>