கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (25ம் தேதி) வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்ைட, சென்னை கடற்கரை- வேளச்சேரி, ெசன்னை கடற்கரை- செங்கல்பட்டு, திருமால்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும். அதேபோன்று டிக்கெட் கவுன்டர்களும் காலை 8 மணி முதல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>