ஜனாதிபதி ராம்நாத் கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுடெல்லி: கிறிஸ்துமசையொட்டி ஜனாதிபதி ராம்நாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், `இந்த நன்னாள் மனிதர்கள் மத்தியில் அமைதி, உலகம் முழுவதும் சமாதானம் நிலவ உதவட்டும். இந்த புனித நாளில், இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த அன்பு, இரக்கம், மனிதநேயம் ஆகியவற்றை நாடு, சமுதாயத்தின் நலனுக்காக அர்ப்பணிப்போம். இந்நாளில், நமது உள்ளங்களில் பிறர் அன்பு, இரக்கத்தை பற்றி எரிய செய்வோம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்துவ சகோதரர்கள், சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>