வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதி மசோதாவை ஓரம் கட்டினார் டிரம்ப்

வாஷிங்டன்: தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க ராணுவ நிதி மசோதாவில் கையெழுத்திட அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். அமெரிக்காவில், ரூ.54.76 லட்சம் கோடிக்கான 2021ம் நிதியாண்டின் ராணுவ நிதி மசோதா, பிரதிநிதிகள் அவையில் 335-78-1 வாக்குகளுடனும், செனட் அவையில் 84-13 வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, தேச பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பதாக கூறி, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் டிரம்ப் இதில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், `இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், தேசிய பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்த பிரிவை திரும்ப பெற இருதரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு அளித்தால் தவிர, தேவையான திருத்தங்களை கூட கொண்டு வர முடியாது,’ என்று கூறப்பட்டுள்ளது.

சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், வரும் 28ம் தேதி வீட்டோ அதிகாரத்தை மீறி, ராணுவ நிதி மசோதா நிறைவேற்றப்படும்,’ என்றார். அதிபர் டிரம்பின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று நிவாரண நிதி மசோதாவிலும் அவர் கையெழுத்திட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>