×

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவக்  கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர்  சேர்க்கைக்கு, மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு  தரவரிசைப்  பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, வேப்பேரியில் கால்நடை  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி  நடந்தது.
பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான  கலந்தாய்வு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் நேற்று முதல் தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், வரும் 28ம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணை வரும் 30ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஜனவரி 13ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.


Tags : Commencement ,consultation , Commencement of public consultation for veterinary courses
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...