பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவிப்பு..!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் வருகின்ற ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க கர்நாடக மாநிலத்தில், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 வரையில் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு, இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்தவர்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு என்ற அறிவிப்பால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, அரசு அறிவித்த இரவு ஊரடங்கு உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>