×

மாஸ்க்காலே நாற்காலி செய்தார்!

தூக்கி எறியப்படும் மாஸ்க்குகளை மறுசுழற்சி செய்து நாற்காலிகளைச் செய்து அசத்துகிறார் கிம். தென்கொரியாவைச் சேர்ந்த இவரை சாலைகளில் கிடக்கும் மாஸ்க்குகள் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. மூளையைக் குடைந்து யோசித்தபோது மாஸ்க்கை உருக்கி நாற்காலி செய்யும் ஐடியா தோன்றியிருக்கிறது. உடனே பயன்படுத்தபட்ட மாஸ்க்குகளை சேகரிக்க ஸ்கூல், காலேஜ் என்று கிளம்பிவிட்டார். அவர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளைப் போடுவதற்காக ஒரு காலி பெட்டியை வைத்துவிடுவார். தினமும் ஆயிரக்கணக்கான மாஸ்க்குகள் சேர்ந்தன. கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து தப்பிக்க அந்த மாஸ்க்குகளை நான்கு நாட்களுக்கு தொடவே மாட்டார். பிறகு 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருக்கி மூன்று கால்களுடைய நாற்காலியைச் செய்வார். இந்த நாற்காலிக்கு நல்ல டிமாண்டும் இருக்கிறதாம். ஒரு நாற்காலிக்கு 1500 மாஸ்க்குகள் தேவைப்படுகிறது என்கிறார் கிம்.



Tags : Maskale , Chair
× RELATED ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை...