×

2021 ஹஜ், உம்ரா புனித பயணம் விண்ணப்பிக்க ரூ.300 போதும் : இந்திய ஹஜ் அசோஷியேசன் அறிவிப்பு

சென்னை, :இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை:
கோவிட்-19 காரணமாக 2021 ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான எந்தவித தீர்க்கமான முடிவையும் சவுதி அரசாங்கம் எடுக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமானப் போக்குவரத்து இல்லை. மேலும், சவுதி அரசாங்கம் சென்ற ஆண்டு கொடுத்த ஹஜ் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மட்டுமே 2021 ஹஜ்க்கு ஒதுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி நிலவி வருகிறது. மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ், குறைந்தது 50 ஆயிரம் பேருக்காவது ஹஜ் பயண ஒதுக்கீடு கேட்டு சவுதி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கும் சவுதி அரசிடம் இருந்து எந்தவித ஒப்புதலும் வரவில்லை. ஆதலால் 2021 ஜனவரி 10ம் தேதி வரைக்கும் ஆன்லைனில் ஹஜ்க்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதற்கு ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். வேறு எந்த முன்பணமும் அரசாங்கம் சொல்லும் வரை கட்டத் தேவையில்லை. சவுதி அரசாங்கம் கடந்த ஹஜ் மற்றும் உம்ரா வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதை மனதில்கொண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் செயல்பட வேண்டும். இதுவரை இந்திய அரசு எந்த டிராவல் ஏஜெண்டுகளுக்கும் அதிகாரம் வழங்கவில்லை. ஆகையால் யாரும் டிராவல் ஏஜெண்டுகளிடம் முன்பணம் கொடுக்க வேண்டாம்.


Tags : pilgrimage ,Hajj ,announcement ,Indian Hajj Association , 2021 Hajj, Umrah Pilgrimage
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு